11 May 2026

ஆன்மீக அறிவே அமைதி நல்கும்

உலகத்தில் அமைதியது உருவாகி நிலைக்க

உயிரறிவு இறையுணர்வு கடமையறம் எங்கும்

பலநாட்டு மக்களது வாழ்வினிலே பரவி

பண்பாடாய் ஊடுருவி நிலைக்கும் முறை வேண்டும்.

சிலதலைவர், அரசியலார், பொருள் துறையார், மதத்தார்

சேர்ந்தாலும் அன்னவரால் ஒருக்காலும் அமைதி

நிலவ வழியுண்டாகா, நீடிக்கும் பகை, போர்

நேர்வழியோ அறிவறியும் ஆன்மீக நெறியே.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top