30 April 2026

புரட்சியினால் நல்ல பயன் விளையாதிக் காலம்

போர் ஒழித்து அமைதிகாணக் கருணையுளம் கொண்டு

திரட்சிமுறை ஒன்று கண்டோம் கர்மயோக மென்று

தெளிந்தெளிதில் பின்பற்ற உலக சமயமாக.

மிரட்சிபெற ஒன்றுமில்லை உணர்ந்திடப் பின்பற்ற

மிக எளிது; பண்பாட்டில் பொருள் துறையில் காணும்

வரட்சியது போய் அன்பு கொண்டு உழைத்து உண்டு

வாழ்வினிலே பிறர்க்குதவி உலக அமைதி காப்போம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top