01 May 2026

அருட்தொண்டு

குற்றவாளி பாவியென்று யாருமில்லை உலகில்

குறைகளுக்குக் காரணமோ பழைய சமுதாயம்

கற்றிடுவோம் புதிய கல்வி கருத்துயர்த்தி மேலாம்.

கடமைகளைச் சிந்தித்துச் செயலாற்றி உய்வோம்;

உற்றசெல்வம், உடலுழைப்பு, அறிவு இவை கொண்டு

உலகுக்கு உதவியருட் தொண்டாற்றி மகிழ்வோம்

மற்றவரை எதிர்பார்த்தல், கையேந்தல் வேண்டாம்.

மாநிதியாம் இறைவனை நம் மனத்தடியில் தேர்வோம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top