
கடவுள் தன்மை
கண்காது மூக்கு வைத்துக் கதைகள் சொல்லிக்
கருத்துக்குக் கடவுள்தனை சிறுமை யாக்கிப்
புண்பட்ட நெஞ்சங்கள் மேலும் புண்ணாய்ப்
போகும் வழியறியாது தவித்து வாழ்வில்
கண்கலங்கி நிற்போர்க்கும் கடவுள் தன்மை
கர்மத்தின் விளைவாக எழுந்தியங்கும்
உண்மையினை விளக்குவதே இக்காலத்திற்கு
ஒத்த உயிர்த் தொண்டாகும் உணர்வோம் செய்வோம்.