
இயற்கை நீதி
ஊழ்வினையாம் கருவமைப்புப் பதிவும் பின்னும்
உருவெடுத்த பின்வினைகள் பதிவும் கூடி
வாழ்வினிலே ஒவ்வொருவர் தன்மையாக
வளம்பெற்றுத் தேவை சூழ்நிலைகட் கேற்பத்
தாழ்வு உயர்வு எனும் எண்ணம் செய்கையாகத்
தழைக்கும் புகுவினையென்ற எழுச்சி ஈதே
ஏழ்பிறப்பும் எவ்வினையும் தொடரும் ஒத்து
எழும் அமைதி இன்பதுன்பம் இயற்கை நீதி.