23 April 2026

தன்னிலை விளக்கம்

பொருள் என்பதே சிவமாம் பூத்த பல்நிகழ்ச்சி

புலனுணர்வால் அறிகின்ற பேரியக்கத் தொடராம்

திரள்திரளாய்த் தனியாயும் கூட்டாயும் காணும்

திங்கள் முதல் கோள்களும் விண்மீன்களும் யாவுமாகும்.

அருளான ஆதிநிலை அதன் இயக்கச் சீர்மை

அறிவாக அறிந்தவரே அறிவறிந்த பெரியார்.

மருள்ஒழிந்த காட்சியவர் மற்றவர்க் குரைக்கும்

மாபெரிய மறை பொருளே தன்னிலை விளக்கம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top