24 April 2026

இறைநிலை

இறையுணர்வார்சிலர் முயன்று வேத நூல்கள் மூலம்

இவ்விறையே அறிவுஎன உணர முடியாமல்

இறைவேறாய் அறிவு வேறாக எண்ணி எண்ணி

எழும்பிணக்கில் புரண்டு புரண்டே மயக்கில் மாள்வார்;

இறைநிலையே அறிவாக இயங்கும் உண்மை காண

ஏற்றதொரு சாதனைதான் அகநோக்குப் பயிற்சி

இறையறிவாய் உலகாக உயிர்களாகத் திகழும்

இந்த உண்மை உயிர்மீது மனம் ஒடுங்க ஒளிரும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top