
மாயை
சிவம் என்னும் பூரணத்தை வெளியென்றே உணர்வீர்;
சிறப்பான அதன் இயக்க ஆற்றல் அறிவாகும்;
சிவத்தினிட முதல் இயக்கம் சீர்மை பெற்ற விண்ணாம்;
சித்தரெல்லாம் சத்தியென்றார்; அந்தச் சத்திக்குள்ளே
சிவமமர்ந்து விளையாடும் சிறப்பதே பேரண்டம்;
சிற்றுருவாய் பிறப்பிறப்பு இடை வாழ்வதுவே உயிர்கள்;
சிவமறியும் பேரறிவைப் பெற்றவனே மனிதன்;
சிந்தனையால் உணரும்வரை சிதறும் மனம் மாயை.