
உதவி
இவ்வுலகில் எவர்க்கெனினும் துன்பம் உண்டுபண்ண,
எந்த அளவோ ஒருவர் உயிர்நலம் பறிக்க
எவ்வகையிலும் ஒருவர்க்குரிமையில்லை. இல்லை.
இயற்கையின் சட்டமிது, காப்புமிது வாகும்.
செவ்வியஉன் அறிவாலே, செயல்திறமையாலே
செய்வது பிறர்க்குதவி சிறந்த வாழ்வு ஆகும்.
ஒவ்வும்வகை யுற்றுணர்ந்து உயிர்க்கினிமை செய்ய,
உயிரனைத்தும் வாழ்த்தும் உனை, நீயுலகை வாழ்த்து