
திருவருள்
அவரவர்க்கு அவரேதான் உயர்ந்தோரென்று எண்ணும்
ஆணவமும் அறிவினது திருக்கூத்தில் ஒன்றே;
தவரவர்க்குத் தவத்தினது முழுமையினைக் காட்டித்
தான் அறிவாய் உளதுணர்த்தும்தரம் அறிவின்கூத்தே;
பவரவர்கள் படுகின்ற துன்பக்கடல் தாண்டப்
பண்பாட்டைத் துன்பவுணர்வின் வழியே காட்டிச்
சிவாவராய்த் தெளித்துய்யச் சிறந்த வழிகாட்டும்
திருவருளைப் பேரறிவைச் சிரம் வைத்துக் காப்போம்.