
கர்ம ஞானக் கருவிகள் பெற்று
அறிந்தும் வாழ்ந்தும் அரூப நிலையாம்
ஆதி நிலையை அறிந்து முடிவுற,
எழுந்த வேகத்தால் எடுத்த வடிவம்
அறிவின் நிலைகள் ஐந்துக்கும் அப்பால்
அறிவின் உயர்வாம் ஆறாம் நிலையில்
வந்து பிறந்து வாழ்வதே மனிதன்;
சிந்தனை அறிவின் சிறப்பே மனிதன்,