
துரியாதீதம்
கவி எண்:369
தூயப் பெருநிலை துரியாதீதமோ
துயர், மகிழ் இரண்டையே துய்த்த என் அறிவை
காலம், பருமன், தூரம், விரைவெனும்
கணக்கிணைக் கடந்து மெய்ப்பொருளோடு இணைத்தது;
இனிப் பழிபுரியேன் புரிந்தவை களைந்தேன்
இறைநிலை உணர்ந்தேன் இணைந்தேன் நிறைந்தேன்
இனி என் உடல் உயிர் ஆற்றலை முறைப்படி
இயக்கிக் கடமையை ஏற்றமாய்ப் புரிவேன்.