
உலகப்பொருள் உடலுக்கும் உண்மைப் பொருள் உயிருக்கும்
உயர்கலைகள் அறிவிற்கும் ஒழுக்கநெறி வாழ்வதற்கும்
நலமளித்தல் நானுணர்ந்தேன் நடுநின்று வாழுகின்றேன்.
நாடனைத்தும் ஊடுருவி நல்லறிவின் தொண்டாற்றி.
வையமெல்லாமல் வாழட்டும் வாழ்க்கைவளம் காத்தினிதாய்
வளரட்டும் மெய்யறிவு வாழ்க்கை இன்பம் துய்த்தலிலே
உய்ய மெய்ப்பொருள் நாட்டம் உலகெங்கும் மக்களிடம்
ஓங்குக மேலோங்குக நம் உள்ளங்கள் ஒன்றுபட.