
எந்தஎந்த காலத்தோ வாழ்ந்திருந்த இறையறிஞர்
சிந்தித்தார்கள்
இயற்கையாய் அன்றுவரை வளர்ந்த பண்பாடொப்ப
மக்களுக்கு
அந்த அந்த காலத்துத் தேவை சூழ்நிலையறிவுக் கிசைந்தவாறு
ஏற்றபடி வாழ்க்கைமுறை வகுத்தார்கள் சொன்னார்கள்
கருணைகொண்டு
இந்தவிந்தை மிகுகாலம் விஞ்ஞான அறிவுக்கு எல்லாம் ஒவ்வா
என்பதனால் இக்காலநிலைக் கேற்ப வாழ்க்கைமுறை
விளக்குகின்றேன்.
சொந்த சிந்தனையொட்டி வாழ்வாராய்ந்து அவ்வப்போ
அன்பர்கட்கு
சொல்லுகிறேன் எழுதுகிறேன் துயர்களைய தூய்மைபெற
நலம்காண்பீரே.