
வினைப்பயன் தவறற்ற இயற்கை நியதி
சிறுதவறு பெருந்துன்பம் விளைத்தல் கண்டு
சிலர் வினையின் பயன் கொள்கை தவறென்பார்கள்
நிறுவையிலே எடைகல் ஓர் தட்டில் வைத்து
நேர் எதிரில் பொருள் வைத்து நிறுக்கும்போது
இறுதியிலே வைக்கும் பொருள் சிறிதென்றாலும்
இதற்கு முன்னம் வைத்ததெல்லாம் சேர்ந்தழுத்தும்
பெறும் உண்மை சான்றாகும் முன் இருப்பாம்
பெருந்தீய பதிவு சிறுதவறால் ஓங்கும்