
விந்து நாதமே உயிர்தாங்கி
உயிர் விண்ணாம் சூக்குமம்ஆம் உடலுக்குள்ளே
உயிர் சுழல விரியும் அலை சீவகாந்தம்
உயிர் காந்தம் உடலில் அணு அடுக்கைக் காக்கும்
உடலியக்கம் மனஇயக்கம் நடத்திவைக்கும்
உயிர் காந்தம் உடலில் மின்குறுக்கு ஆனால்
உடலில் வலி நோய்கள் இவையாக மாறும்
உயிர் காந்தம் மின்குறுக்கால் வற்றிப் போனால்
உயிர் தாங்கும் வித்துடையும் உயிரும் போகும்