
அறிவறிந்த உயர்பேறு
அகண்ட பேரண்டமும் அணுவுமான
ஆண்டவனோடெனை இணைத்த அடக்கப் பேற்றால்
அகண்ட பேராதராத் திருப்பி யக்கம்
அனைத்து விளைவும் எனது அறிவுக் கெட்ட
அகண்ட நிலையே நானாய் அறிவாய் ஆற்றி
ஆங்காங்கு அதுவதுவாய் விளைவு வேறாய்
அகண்டத்தும் கண்டத்தும் அடங்கியுள்ள
அத்தனை மறை பொருளும் விளங்கக் கண்டேன்.