
சிறந்த பண்பாடு
பழக்கமென்றும் பழமையென்றும் பகுத்தறிவுக் கொவ்வா
பல செயல்கடமை மாற்றிப் பண்பாட்டை வளர்ப்போம்.
ஒழுக்கமது துன்பம் எழா அளவு முறையோடு
உணர்ச்சிகளைச் சீர் செய்து வாழும் முறையாகும்;
அழுக்காறு, அவா, வெகுளி ஆகாது போக்கி
அன்பிரக்கம், தொண்டு, தவம் அறிவின் விழிப்பேற்போம்
பழுத்தறிவு முழுமை பெறும் பர உணர்வு கிட்டும்
பற்றறிந்து பலனுணர்ந்து பண்புடனே வாழ்வோம்.