07 April 2026

அருள்நெறி தழைத்தோங்கும்

மெய்ப்பொருளே தானாக அறிவாய் ஆற்றும்

மேன்மையினை உணர்ந்து விட்டார் பலர் என்றாலும்

அப்பொருளே அனைத்துயிராய் ஆற்றும் உண்மை

அறிந்துயிரோடு உயிர்இணைய அன்பு ஊற்றாம்;

இப்பெரிய தகைமையினைச் சிலரே பெற்றார்.

இனியும் சில ஆண்டுக்காலம் செல்லச் செல்ல

தப்பாது மக்களெல்லாம் மெய்யுணர்வார்

தழைத்தோங்கும் அருள்நெறி இவ்வுலக மெங்கும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top