
மரத்தினிலே விதையும் அந்த வித்தினிலே மரம்போல்
மனிதனுக்குள் தெய்வம். அந்த தெய்வத்திற்குள்
மனிதனாம் பரத்தையுணர் அது வெளியாம். பஞ்சபூதக் கூட்டெனும்
பதமடைந்த உடலுக்குள் அப்பரவெளியே அறிவு ஆம்
உரத்த ஓசை ஒடுங்கமோனம் உணரவல்ல அறிவுளாய்
உருவம், ஒசை, ஒளி, சுவைகள், மணம் இவைக்கு மூலம்காண்
துரத்திடாதே உன் மனத்தைத்துன்ப இன்ப ஆழ்விலே
தோன்றிய நீ அமருமிடம் சுத்த வெளி தேர்ந்துநில்.