09 March 2026

இயற்கையதன் நிகழ்ச்சிகளை விதி என்கின்றோம்.

எண்ணத்தின் செயல்வகையை மதி என்கின்றோம்.

இயற்கை நிகழ்ச்சிகள் பஞ்சு, இரும்பு என்றால்

இவை மதியால் ஆடை, ஆயுதங்களாச்சு.

இயற்கையினை அறிந்த அளவறிவின் மேன்மை

இதையறிந்தால் விதிமதியின் குழப்பம் போகும்.

இயற்கையின்றி எந்நிகழ்ச்சி உண்டு சொல்வீர்

எண்ணமின்றேல் இயற்கைக்குச் சிறப்பு ஏது?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top