
ஆதியிலே எழுந்த சுழல் அலைவிண்ணாகும்;
அவ்விண்ணில் எழும் விரிவு அலையே காந்தம்;
ஆதியே முற்றறிவாய் வெளியாய்க் கொள்வோம்;
அவ்வறிவே விரிந்தியங்கும் அணுவில்கூட்டில்
ஆதியே அவ்வந்த நிலைகட் கேற்ப
அறிவாகி அதன் தன்மையாய் விளங்கும்
ஆதியே அறிவு அதே அணு அண்டங்கள்
அனைத்துயிரும் எனவிளங்க மெய்யுணர்வாம்.