
கண்காணும் தோற்றத்தில் கருத்தால் கூர்ந்து
களங்கமிலா நுண்ணியக்க மாக வுள்ள
விண்கண்டு அதன் இயக்க ஒழுங்காய் ஆற்றும்
வேதத்தில் விவேகமாம் அறிவறிந்து
நுண்மாண் நுழைபுலனால் நுணுகிமேலும்
நுண்ணணுவின் பிறப்பிடமாம் பரமுணர்வீர்
மண்கடந்து விண்கடந்து வெளிகண்டால்மும்
மலமொழிந்த காட்சியதே மாதவம் ஆம்.