20 November 2026

உலக நல வேட்பு

உலகிலுள்ள பொறுப்புடைய தலைவரெல்லாம்

உயிரறிவை உள்ளுணர்வாய்ப் பெறுதல் வேண்டும்

உலகனைத்து நாடுகளின் எல்லைகாக்க

ஒருலகக் கூட்டாட்சி வலுவாய் வேண்டும்

உலகில் போர் பகை அச்சமின்றி மக்கள்

உழைத்துண்டு வளம்காத்து வாழவேண்டும்

உலகெங்கும் மனிதகுலம் அமைதியென்னும்

ஒரு வற்றாத நன்னிதி பெற்றுய்யவேண்டும்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top