
தாய், தந்தை, குரு வணக்கம்
உணர்ச்சிப் பெட்டியாம் உடலுயிர்கட்கு
உட்பொருளாகவும் முன்உயிர் உடல்களாய்
உள்ள என் அன்னையை, தந்தையை மதிப்பொடு
உள்ளத்தில் வைத்து வணங்கினேன் உருக்கமாய்
உயிரையும் அறிவையும் என்னுளே செலுத்தி
உயர்தவ முறையை உணர்த்திய ஞான
ஆசான் அவர்களை அன்பொடு வணங்கினேன்.