
இறைநிலையால் வடிவமைத்து எண்ணற்ற தலைமுறையாய் வித்து நாதம்
எனும் கருவின் தொடராக இயங்கிவரும் மதிப்புடைய உடலையும் அவ்
விறையாற்றலே பரமஅணுவாகி எத்தனையோ பதிவுகளை உள்ளடக்கி
இயங்குகின்ற உயிரினங்களில் உயிராய் இயக்கச்சீராய்
இறைநிலையே உயிர்களிலே இன்பம் துன்பம் அறிவாயும் இயங்கி நிற்கும்
இரகசியங்களையறியத் தகுதியுள ஆறாவதறிவாயுள்ளோம்
இறைநிலையும் அதனுடைய ஆற்றலையும் எழும்தோற்றம் விளைவு எல்லாம்
எண்ணி எண்ணி இன்புற்றும் இல்லறத்தில் கடமை
செய்தும் இனிதாய் வாழ்வோம்.