
உலகிணைந்த ஆட்சிமுறை கல்விமுறை வேண்டும்
கருத்தொடராய் வந்த வினைப்பதிவுகளின் வலுவைக்
கணிக்காமல் மதிக்காமல் ஏற்ற நல்லவினையால்
திருத்திடவோ சீரமைத்தோ உய்ய நினையாமல்
திரும்பவும் அப்பழைய வினைவழி நின்றேவாழ்ந்தால்
வருந்துவதும் வருத்துவதும் அன்றிவளம் ஏது?
வாழ்வுள்ளோர் அனைவரும் இவ்வுண்மையை உணர்வோம்
பெருத்துவரும் பழிச்செயல்கள் மாறி உலகுய்ய
பேருலகம் இணைந்த ஆட்சி கல்வி இவைவேண்டும்