
கல்வி செல்வம் பொருளுடமை மக்கள் பலம் நட்பு
கண்ணியமாம் ஆளுமைப்பே ரனைத்துமிருந்தாலும்
கல்வியிலே உயர்ந்த அருட்கல்வியில்லை யானால்
கற்றபெற்ற அத்தனையும் சுயநலமாம் அன்புக்
கல்வியெனும் சமநோக்கு நேர்நிறை யுணர்வு
கருத்தினிலே உருவாகா பிறர்பொருள் சுரண்ட
கல்வியெல்லாம் பயனாகும் கனிவு அன்பு நீதி
கடமையிவை மறைந்து நிற்கும் தன்முனைப்பே ஓங்கும்.