
வித்தின் பெருமை
வித்தளவு அழுத்தமொரு தூய்மைக் கொப்ப
விளைவாகும் உடல்கட்டு மனதின் தன்மை
வித்தினது பெருமையினை உணராமுன்னம்
வீணாக அளவுமுறை மீறி மாறி
வித்ததனை செலவழிப்பார் உயிர் நட்டம் ஆம்
வினைவிளைவாய் நோய்கள்பல உருவெடுக்கும்
வித்து, உயிர், காந்தம், மனம், உடல் இவ்வைந்தும்
விளைவறிந்த விழிப்போடு காத்தல் வேண்டும்.