
கலைகளனைத்தையும் சிறப்பிக்கும் காயகற்பக்கலை
ஆயகலைகள் மொத்தம் கணக்கெடுத்தோர்
அறுபத்து நாலு என்றார் அனைத்தும்கற்றும்
காயகற்பமெனும் கலையைக் கற்காவிட்டால்
கற்றதெல்லாம் மண்புக்கும் உடல் விழுந்தால்
மாயமெனும் காந்தம் உயிர்வித்து மூன்றில்
மறைந்துள்ள இரகசியங்கள் விளங்கிவாழ்ந்தால்
தீயவினைகள் கழிய உலகுக் கென்றும்
தெளிவான அருள் ஒளியாய் நிலைக்கும் ஆன்மா