03 July 2026

தலைமை அவசியம்

குடும்பத்தில் தொழில் துறையில் அரசாங்கத்தில்

குழுமுறையில் தலைமை ஒன்று அவசியம் ஆம்

கடும்பற்று தன்முனைப்பு தலைவன் விட்டு

கடமைக்கே ஆட்சி முறை நடத்த வேண்டும்

கொடுங்குற்ற முடையோரும் திருந்துவார்கள்

குறை தவறாய்க் கூறிடினும் பொறுத்துக் கொண்டு

இடும்பை களைந்துதவுதலே என்றும் எங்கும்

இன்பம் மனநிறை வமைதி ஈட்டிக் காக்கும்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top