
துன்பத்தில் தெளிவு
தன் குற்றம் குறைகடமை தன்னுள் ஆய்ந்து
தான்கண்டு தனை திருத்தும் தகைமை வந்தால்
ஏன்குற்றம் பிறர்மீது சுமத்தக் கூடும்!
ஏதேனும் கண்டாலும் மன்னித்தாளும்
மென்மைக்கே மனம் உயரும் பிறர் தவறால்
மிகவருத்தம் துன்பமது வந்தபோதும்
நன்மைக்கேயாம் செய்த பாவம் போச்சு
நாம் கண்ட தெளிவு இது வாழ்த்தி வாழ்வோம்