
வித்து அது அளவழுத்தம் தூய்மையெய்த
வேண்டும் அளவில் உடலில் உயிரும்தங்கும்
சத்தான உயிர் அளவு நிறைந்திருந்தால்
சரீரத்தில் சீவகாந்த ஆற்றல் ஓங்கும்
சித்திருவாய் ஒளிர் சீவகாந்தம் ஓங்க
செல்கள் அணு அடுக்குடலில் சீரமைந்து
ஒத்தியங்கும், நோய் முதுமை மரணம் தள்ளி
ஒதுங்கிவிடும், விரும்புங்கால் சமாதி கிட்டும்