
அருட்பா
ஊன் உருவச் சிறப்பறிந்து ஒழுக்கப் பண்பால்
உலகில் வாழ்ந் தறிவறிந்து முடிவு கண்டோர்
தான்பெற்ற அனுபவத்தை உலகுள்ளோர்க்குத்
தக்கபடி பயன்படுத்த எழுந்த ஆர்வம்
வான்பெய்து உலகூட்டும் வேகம் போன்று
வரிசையுள்ள வார்த்தைகளால் கருத்துபொங்கி
மேன்மையுள்ள கவிகளாய் வருவதுண்டு
மிகச்சிறப்பாம் அருட்பாக்கள் இவையே ஆகும்.