
வினையும் விளைவும்
இயற்கையென்ற பேராற்றல் மனித உடலதனை
எவ்வளவோ காலமாக ஏற்ற நுட்பத்தோடு
வயிற்றினிலே வைத்து லட்சம் தலை முறைகளாக
வடிவமைத்து அளித்துள்ளதென்னும் உண்மை மறந்து
முயற்சியினை மனிதன் தன் முனைப்பிலாழ்த்தி இன்பம்
மிகையாக எவ்வுறுப்பால் துய்த்துக் கெடுத்தாலும்
பயிற்சி தரும் பாடம் போல் அவ்வுறுப்பின் வழியே
பலநாட்கள் வருந்த ஏற்ற நோய் விளையும் அறிவோம்.