
பேரறிஞர் வழி செல்வோம்
அருவுருவாம் அகத்ததனை விளக்கி வாழ்வில்
அல்லல் களைந்தமைதி பெற்று மக்கள் உய்யக்
கருவிளக்கி மன வளத்தைப் பெருக்கிக் காக்கும்
கலையதனைக் கவி மூலம் விரித்துரைத்தத்
திருமூலர், வள்ளுவனார், இராமலிங்கர்
திருவருளார், மணிமொழியார், தாயுமானார்.
பெரு நோக்கப் பயன் விளக்கி உலகம் உய்யப்
பேரறமாம் அருட் தொண்டில் பங்கு கொள்வோம்.