01 June 2026

தொண்டுநிலை

இறை நிலையும் உயிர்நிலையும் வினைவிளைவும் அறிய

ஏற்ற மிகும் மெய்யறிவை எவர் விரும்பினாலும்

நிறை மனத்தோடவர் உண்மைநிலைப் பொருள் உணர்ந்து

நேர்மை வழி வாழ்ந்துய்ய சித்தர் அருளாலே

மறை பொருளை எளிதாகப் பிறர்க்குணர்த்தும் தொண்டில்

மண்ணுலகோர் விண்ணுலகை உணருகின்றார் மனத்தின்

கறை நீங்கி உள்ளுணர்ந்து வாழ்வில் வளம் காணும்

காட்சியிலே பெறும் மகிழ்ச்சி பேரின்பமன்றோ?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top