
வள்ளலார் அருள்
என்று எனை இராமலிங்க வள்ளல் பெருமானார்,
எதிர் நின்று காட்சி தந்து அருளைப் பொழிந்தாரோ
அன்று முதல் உடல் உயிரோடறிவை அருட் பணிக்கே
அர்ப்பணித்து விட்டேன் என் வினைத்தூய்மையாச்சு
இன்று எந்தன் மனநிலையோ வள்ளற் பெருமானார்
எந்த செயல் செய்யென்று உணர்த்துவாரோ அதுவே
நன்று எனக் கொண்டவற்றை நான் முடிக்கும் பேற்றால்
நல்லறிஞர் பலர் எனக்கு நட்பை அளிக்கின்றார்.