13 May 2026

உய்யும் வழி

தவமுறையும் அற நெறியும் பற்றப் பற்றத்

தறுக் கென்ற தன்முனைப்புக் குன்றிப்போகும்

பவவினைகள் புதிது எழா; முன்னம்செய்த

பதிவுகளும் மறைந்து மெய்ப்பொருளும் காணும்

சிவ நிலையை சீவனிலே உணர்ந்து கொண்டால்

சிறுமை தரும் மனமயக்க மாயை ஏது?

எவரெனினும் இவ்வழியாலன்றி உய்ய

ஏது வழி வேறுலகில் எண்ணிப்பாரீர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top