
சார்பு நிலையில் சமாதானம் இல்லை
அரசியலார் பிற நாட்டை அடக்கியாளும் முறையால்
அன்பு வழி எனக்கூறும் மதத்தலைவர் பிறரை
இரவுபகலாய் முயன்று தன் மதத்தை விரிக்க
இழுத்துச் சேர்த்துத் தங்கள் இனம் பெருக்கும் முறையால்
பரவியுள்ள பொருள்துறையில் இயந்திரங்கள் மூலம்
பணம் சேர்க்கும் பொருள்தலைவர் போட்டியினால் வெற்றி
உரம்பெறவே நீடிக்கும் உட்கருத்தைக் கொண்டும்
உலக அமைதிபேச ஒத்துவருமோ விளைவு?