
ஒழுக்கவழி
பெற்றவர்கள், குரு, அரசன், தெய்வமென்ற ஐவர்
பெருமதிப்பை உணர்ந்தறிவால் வணங்கி நலம் காண்போம்
சுற்றத்தார், தான், குடும்பம், சமுதாயம், உலகம்
சொல்லுமைந்து பிரிவினர்க்கும் கடமை செய்தேவாழ்வோம்;
நற்றவமாய் உயிருணர்ந்து நாடிநின்று மனத்தை
நல்முறையில் சீரமைத்து ஒழுக்க வழி வாழ்வோம்
கற்றவர்கள் கல்லாதோர் ஆண்கள் பெண்கள் வாரீர்
கருப்பு வெள்ளைத் தோல் நிறத்தோர்க்கு உலகமதம் ஒன்றே.