05 May 2026

வேண்டுகோள்

இறைவா நற்கர்ம யோகம் உலக சமய மென்ற

எண்ணமதை என்னுளத்தே எழுப்பிவிட்டாய் அறிவேன்.

உறைவாய் என்னுளத்தறிவாய் உனக்கு எனைத்தந்தேன்;

ஒருசிறிய கருவியாக எனையுலகுக் காக்கு

முறையாகத் தலைவர்களை அறிஞர்களை இணைத்து

முழுஅளவில் மனிதகுலம் உணர்ந்து ஏற்கச் செய்வாய்

மறைவாக மாந்தருள்ளே அறிவாக உளநீ

மண்ணுலகில் மக்களிடம் பரவ விடல்வேண்டும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top