09 April 2026

ஆனந்த அனுபவம்

கட்புலனால் காணுகின்ற பொருட்கள் ஊடே

கருத்தூன்றி விண்ணறிந்து அதற்குமூல

உட்பொருளாம் பரம்பொருளை உணர்ந்த போது,

உலகங்கள் தெய்வமயம்; உயிர்வகையாம்

லட்சங்கள் தெய்வமயம்; அகம் பரத்தில்

லயமாகும் அனுபவம் பேரின்ப மாகும்

அட்சரங்கள் கொண்டு எழுதமுடியாது இந்த

ஆனந்த அனுபவத்தை; மவுனமன்றோ!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top