
பக்தி, யோகம், ஞானம்
அறிவறிந்தோர் சிவமாவார்; அன்புஊறும்
அறம் செழிக்க அவ்வறிவே நல்லுரம் ஆம்
அறிவினது ஆற்றல் ஐம்புலன்கள்
அனுபவத்தில் சிக்கிவிட வேண்டாப் பற்றாம்
அறிவறிய மனத்துக்கும் செயலுக்கும் ஓர்
அரணாகும் பக்தி, யோக நெறி இரண்டும்
அறிவறிந்து அவ்வழியில் செயல்களாற்றும்
அகன்ற பேரறமே மெய்ஞ்ஞானமாகும்.