
ஆக்கினைச் சக்கரம்
அன்னவர் உணர்த்திய ஆக்கினைச் சக்கர
அசைவில் சுழலில் அறிவைப் பொருத்த என்
அறிவு ஓர்மையில் நிலைத்து அமர்ந்தது
என்நிலை மறந்து நான் இனிஎச் செயலையும்
எங்கும் எப்போதும் இயற்றாதிருக்கவும்
முன், நிகழ், பின் எனும் முக்காலத்தையும்
முறையாய் இணைத்து நினைக்கவும் பேசவும்
செய்யவும் ஏற்றத் திறன் வளர்கின்றது.
உய்ய நல்லறிவின் ஒளி மிகுகின்றது.