30 September 2026

உண்ணும்போது உயர்ந்த நினைவு

அன்பர்கள் நண்பர்கள் அனைவரும்கூடி

நன்றியுணர்வுடன் நாம் இவ்வுணவை

உண்ணத் தொடங்குவோம் உடல்நலத்துக்கே.

எண்ண விழிப்புடன் இவ்வுணவு அளவுடன்

உச்சியில் நினைவை வைத்துக் கொள்வோம்.

உண்போம் இனிய நினைவோடு இவ்வுணவை

உடல்நலம் ஆயுள் உயர்புகழ் அமைதி

இடமதன் தூய்மை எல்லாம் அமைக!

இவ்வுணவளித்தோர் இறைவன் அருளால்

எவ்வகையாலும் ஏற்றமாய் வாழ்க!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top