
மெய்யுணர்வு
அணுவாயும் தனித்தனியே இயங்கிக் கொண்டு
ஆறாகவும் காட்சியளிக்கும் நீர்போல்
அணுவாயும் கூட்டுறவாய்க் காட்சியாகும்.
அகண்ட பேரண்டத்தில் தோற்றமெல்லாம்
அணு நிலையை பருஉருவில் உணரவல்ல
அறிவு தான் உயிருணர்வாம் அதற்கு மேலும்
அணுவுக்கு ஆதிநிலை பிரம்மம் என்று
ஆழ்ந்துணர்ந்த அறிவே மெய்யுணர்வு ஆகும்.