
இயற்கை யெனில் வெட்டவெளி அனைத்தண்டங்கள்
எண்ணற்ற சீவ இனம் எல்லாம் ஆகும்.
இயற்கையது இயங்காத நிலையில் மௌனம்
இதுவேதான் சுத்தவெளி, சூன்யம், பிரம்மம்.
இயற்கையே இயங்குநிலை அணுவதாகும்.
இந்த இருநிலைகள்தான் எழுச்சி, ஈர்ப்பு.
இயற்கையே காந்தம், மின்சக்தி மற்றும்
இராசயானங்கள், உணர்வு என்ற பிரிவு நான்கும்.