
எளியவர் அழுத கண்ணீர்
அடிமைப் பட்டோர் உளம்வருந்த அவர்கள் எண்ண
அலைகள் நாளடைவில் பெரும் வலுவைப் பெற்று
அடிமை கொண்டோர் வருந்தி வாழ்விழக்கச் செய்யும்
அறியாதோர் வறியர் எளியோர் கடமை
அடிமை கொள்ளும் மனப்பான்மை ஒழித்து உதவி
அவர்கள் உயர் நலம் காணத் தொண்டு செய்து
அடிமை முறை ஒழித்திடுவோம் அனைத்துயிர்க்கும்
அன்பு கருணை காட்டி அமைதி துய்ப்போம்