21 May 2026

அருட் தொண்டு

நிறை நிலையை மறந்து ஐந்து புலன்கள் மூலம்

நினைவலையாய் இயங்கி மனம் எல்லை கட்டி

சிறைப்பட்ட நிலைமையதே மாயையாச்சு

சிந்தனையில் உயர்ந்து பெற்ற அகத்தவத்தால்

இறைவனோடு நிறை நிலையில் நிற்கக் கற்றோம்.

எல்லையற்ற வீடுற்றோம் அறிஞர் போற்றும்

மறைபொருளே அகத்ததுவாய் விளங்கும் உண்மை

மற்றவர்க்கும் உணர்த்தி உளம் மகிழ்வோம் வாரீர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top